தூத்துக்குடி: தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு கோல்ட் டெஸ்டிங் கடையில் 37.3 சவரன் தங்கக் கட்டியை திருடிய பணியாளர் கைது – 37.3 சவரன் தங்ககட்டி மீட்பு கடந்த (23.08.2025) அன்று மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட WGC ரோட்டில் உள்ள ஒரு கோல்ட் டெஸ்டிங் கடையில் உள்ள 37.3 சவரன் தங்க கட்டி காணாமல் போயுள்ளது. இது குறித்து மேற்படி கடையின் உரிமையாளரான தூத்துக்குடி WGC ரோடு பகுதியைச் சேர்ந்த கேசவன் மகன் விகாஸ் சிண்டே (46). என்பவர் நேற்று அளித்த புகாரின் பேரில் மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி கடையில் பணிபுரிந்து வந்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பாபு சித்திக் மகன் விட்டால் சிங்கதே (29). என்பவர் கடையில் இருந்த தங்க கட்டியை திருடியது தெரியவந்தது இதனையடுத்து மேற்படி போலீசார் குற்றவாளி விட்டால் சிங்கதே என்பவரை கைது செய்து அவரிடமிருந்த திருடப்பட்ட 37.3 சவரன் தங்க கட்டியையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.