திருச்சி: பேருந்தில் பிரசவவலி வந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பெண் தலைமை காவலரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்த மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்கள்…!!!
திருச்சி மாவட்டம் 14.07.2021 அன்று நாமக்கல் – திருச்சி செல்லும் பேருந்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் திருச்சிக்கு சென்று கொண்டிருந்தார். திடீரென கர்ப்பிணிப் பெண்ணிற்கு வலி ஏற்பட்டு விட்டது. தக்க சமயத்தில் அப்பேருந்தில் சென்றுகொண்டிருந்த முசிறி மகளிர் காவல் நிலைய பெண் தலைமை காவலர் திருமதி.கனகாம்பரம் கர்ப்பிணி பெண்ணிற்கு ஆறுதலாக இருந்து, வாகன ஓட்டுநரை விரைவாக மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தினார்.
அப்பேருந்து முசிறி அரசு மருத்துவமனைக்கு நேரடியாக சென்றது. உடனே பெண் தலைமை காவலர் மருத்துவர்களை சந்தித்து விவரங்களை எடுத்துச் சொல்லி துரிதமாக சிகிச்சை பெற உதவி செய்தார்.
தக்க சமயத்தில் உதவி செய்த பெண் தலைமை காவலருக்கு மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் உயர்திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.