தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை , காவல் நிலைய கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான பாலா என்கிற ஆட்டோ பாலா, மற்றும் பாண்டி, ஆகியவர்களுக்கு ஆயுள் தண்டனையும், ரூ 10,000 அபதாரமும் விதித்து முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார். மேலும் இவ்வழக்கினை சிறப்பாக புலன் விசாரணை செய்த காவல் ஆய்வாளர் திரு.செங்கமலகண்ணன் (தற்போது பட்டுக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர்) , அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ,அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
குடந்தை-ப-சரவணன்