திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்.இ.கா.ப., மேற்பார்வையில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசந்திரன், தலைமையில், தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து பொதுமக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேசிய மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசந்திரன், 2005 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டதாகவும், இச்சட்டம் மூலமாக அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் செயலாற்றல் குறித்த தகவல்களை பெற விரும்பும் குடிமக்கள், தமிழ் அல்லது ஆங்கில மொழியில் எழுத்து வடிவிலோ அல்லது மின்னணு வழியிலோ உரிய அலுவலகத்தில் கட்டணத்துடன் விண்ணப்பித்து 30 நாட்களுக்குள் விண்ணப்பதாரர்களுக்கு தகவல் அளிக்கப்படும். ஆனால் சில முக்கிய பிரிவுகளின் கீழ் வரும் தகவல்களை பெற விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. என்றும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிமுறைகள் குறித்தும், மேல்முறையீடு செய்வது பற்றியும், பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்