பகுதி நேர வேலைவாய்பபு, என வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பிவிட்டு அதை தொடர்ந்து ஒரு லிங் அனுப்பி அதை கிளிக் செய்தவுடன் ஒரு
டெலிகிராம் டாஸ்க் குருப் இணைந்து விடுவர் அதில் யூ டியூப், மூவி,ஹோட்டல் போன்றவற்றை லைக் மற்றும் ரெவியூ செய்தால்
ரூ. 50 தருவதாக கூறி அவர்கள் செய்த வேலைக்குண்டான பணத்தை உடனே வங்கியில் செலுத்தி விடுவார்கள். இதே வேலையை மேலும்
தொடர வேண்டுமெனில் பிரிபெய்டு டாஸ்க் என்ற புது டெலிகிராம் குருப்பில் இணைத்து விடுவர் அந்த குருப்பில் உள்ள அனைவரும்
அவர்களுக்கு தெரிந்த நபர்கள் ஒன்றிணைந்து போலியாக லாபம் அடைந்தாக அவர்களுக்குள் மெசேஜ் அனுப்பி நம்ப வைப்பார்கள் பின்புஅவர்கள் அனுப்பிய காயின் கலெக்டர் என்ற இணையத்தில் ஒரு அக்கவுண்ட் தொடங்க சொல்லி அதில் 20 டாஸ்க் கொடுத்து ஒவ்வொரு டாஸ்கிற்காக குற்றவாளிகள் அனுப்பிய வங்கி கணக்கில் பணத்தை முதலீடு செய்த பின்பு பகுதி நேர வேலைக்கான மொத்த தொகையை காயின் கலெக்டர் இணையதளத்தில் அவர்களுக்கென்று தொடங்கப்பட்ட அக்கவுண்டில் டிஸ்பிளே செய்வார்கள். அந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமெனில் (withdraw) அனைத்து டாஸ்குகளையும் முடிக்க சொல்லியும் முதல் டாஸ்க் ஆயிரம் ரூபாயில் தொடங்கி 10 வது டாஸ்கிற்கு மேல் ஒரு கோடி ரூபாய் வரை கட்டசொல்லி விட்டு ஏமாற்றி விடுவார்கள். இம்மாதிரியான பல புகார்கள் தினம்தோறும் தாம்பரம் மாநகர காவல் அலுவலகத்திற்கு வந்தவண்ணம் உள்ளது. எனவே இம்மாதிரியான டெலிகிராம், வாட்ஸ்அப், குறுஞ்செய்திகளை பார்க்கும் போது கவனமாக இருந்து தங்கள் பணத்தை இழக்காமல் இருக்க தாம்பரம் மாநகர காவல் துறை கேட்டுக்கொள்கிறது.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்