திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரத்தை சேர்ந்த சுவாமிநாதன் (46). அம்பாசமுத்திரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். இவர் பணியாற்றும் நிறுவனத்தை சேர்ந்த பொக்லைன் இயந்திரத்தை ஆலங்குளம் பைபாஸ் ரோடு அருகே(19.11.2024) அன்று 200 லிட்டர் டீசல் நிரப்பி வைத்து விட்டு, பின்பு (20.11.2024) அன்று காலை வந்து பார்த்த போது அதில் இருந்த 200 லிட்டர் டீசலை காணவில்லை.
இது குறித்து சுவாமிநாதன் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் உதவி ஆய்வாளர், ஆனந்த பாலசுப்ரமணியன் விசாரணை மேற்கொண்டதில் இத்திருட்டில் ஈடுபட்டது. ஊர்க்காடு, வடக்கு தெருவை சேர்ந்த ராஜேஷ்வரன் (40). என்பது தெரியவந்தது. இதை அடுத்து ராஜேஸ்வரனை கைது செய்து 200 லிட்டர் டீசரையும் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்