கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் டி.எஸ்.பி தலைமையில் நேற்று இரவு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
நெல்லை ,தூத்துக்குடி ஆகிய மாவட்டத்தில் இருந்து குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு கனிமவளங்கள் கடத்தப்படுவதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தது தூத்துக்குடி டி.எஸ்.பி திரு.தர்மராஜ் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சுமார் 3 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சோதனை பணியில் இருந்த காவலரிடமிருந்து ரூ.15 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.