கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு. சுந்தரவதனம் IPS அவர்கள்* போதை பொருட்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக (04-12-2024) கன்னியாகுமரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் *திரு. மகேஷ் குமார் அவர்கள்* சுசீந்திரம், கொட்டாரம் பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டர்கள்.
இந்த சோதனையின் போது மாணவர்களுடன், மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார்கள். போதை பொருள் சம்பந்தமாக ஏதேனும் தகவல் இருந்தால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க அறிவுறுத்தினார்கள். மேலும் காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் பள்ளிக்கூடங்களை சுற்றி உள்ள கடைகளிலும் போதைப்பொருள் குறித்த சோதனை நடத்தினார்கள்.