தூத்துக்குடி: மணியாச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. குரு வெங்கட்ராஜ் தலைமையில் கடம்பூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. கவிதா, சார்பு ஆய்வாளர் திரு. ரவீந்திரன் மற்றும் போலீசார் பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சில்லாங்குளம் பகுதியில் உள்ள என்.கே.என் கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரி மாணவிகளிடம் பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், பாலியல் குற்றங்கள் குறித்தும், சிசிடிவி கேமரா பொருத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், போதை பொருள் தடுப்பு குறித்தும் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.