மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே விக்கிரமங்கலத்தை அடுத்துள்ள வி.கோவில்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ்பாபு, லாரி, டாட்டா ஏசி உள்ளிட்ட வாகனங்களுக்கு பகுதி நேர டிரைவராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை மது அருந்த செல்வதாக கூறி விட்டு சென்றவர் காலை வரை வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால், சந்தேகமடைந்த குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். இந்நிலையில், விக்கிரமங்கலம் உண்டாங்கல் மலை அருகில் உள்ள அரசு மதுபான கடை அருகில் பலத்த காயங்களுடன் சுரேஷ்பாபு படுகொலை செய்யப்பட்டு கிடந்ததைக் கண்ட உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த விக்கிரமங்கலம் காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு சுரேஷ்பாபுவை படுகொலை செய்த மர்ம நபர்கள் யார், கொலைக்கான காரணம் என்ன என தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.மதுபான கடை அருகிலேயே டிரைவர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்
படுத்தியுள்ளது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி