திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மினுக்கம்பட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்ற டிராக்டர் பின்புறம் பின்னால் அதிவேகமாக வந்த கார் மோதி விபத்து. இந்த விபத்தில் காரில் வந்த துணை ஆட்சியர் சிவக்குமார் படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வேடசந்தூர் போலீசார் துணை ஆட்சியர் சிவகுமாரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். தற்போது துணை ஆட்சியர் மோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா