திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த ஊரணம்பேடு பகுதியை சேர்ந்த ஜோதி என்பவர் 10-ஆம் வகுப்பு மாணவனான தமது சகோதரி மகன் விமல்(14). என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் வில்லிவாக்கம் சென்று கொண்டிருந்த போது வல்லூர் சந்திப்பில் சென்ற போது, வடசென்னை அனல் மின் நிலையத்திற்கு சென்ற டிப்பர் லாரி, இரு சக்கர வாகனத்தின் பின்புறத்தில் மோதியதில், லாரியின் அடியில் சிக்கியது.இதில் ஜோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த 10-ஆம் வகுப்பு மாணவன் விமலை மீட்ட காவல் துறையினர் மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்த போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இருவரின் சடலங்களையும் கூராய்வுக்காக சென்னை அரசு ஸ்டேன்லி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே விபத்து ஏற்படுத்திய திருவண்ணாமலையை சேர்ந்த லாரி ஓட்டுநர் ஹரி பிரசாத்தை கைது செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல, வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் ரத்தீஷ்(20). என்ற இளைஞர் உயிரிழந்தார். இரு சம்பவங்கள் குறித்தும் செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு