திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே டிப்பர் லாரியில் செங்கல் ஏற்றி சென்று கொண்டிருந்த ஓட்டுநர் பொன் ராஜேஸ்வரன், (26). தென் திருப்பவனம் பேருந்து நிலையம் அருகே ரோட்டில் சுமார் 5 கிராம் எடையுள்ள தங்க செயின் கேட்பாரற்று இருப்பதை பார்த்தவுடன் அதை எடுத்து உரிய நபரிடம் ஒப்படைக்கும் நோக்கத்தில் முக்கூடல் காவல் நிலையத்தில் நேர்மையான முறையில் ஒப்படைத்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப., ஓட்டுநர் பொன் ராஜேஸ்வரனை நேரில் அழைத்து அவருடைய நேர்மையை பாராட்டி வகையில் பொன்னாடை அணிவித்து சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி கௌரவித்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்