தேனி: தேனிமாவட்டத்தில் எம்.சாண்ட் மணல் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இது குறித்து மாவட்ட புவியியல் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது.அதன்பேரில் கேரளாவிற்கு லாரிகளில் மறைத்து வைத்து எம்.சாண்ட் கடத்தப்படுவதாக உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு உமாதேவிக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிலைமணி, சப் இன்ஸ்பெக்டர் திரு.விஜய்ஆனந்த் தலைமையில் போலீசார் கம்பம் புறவழிச்சாலையில் கேரளாவிற்கு ஜல்லிக்கற்களை ஏற்றிச்செல்லும் டிப்பர் லாரிகளை நிறுத்தி ஜல்லி கற்கள் ஏற்றி செல்வதற்கான பாஸ்களை சோதனை மேற்க்கொண்டனர்.
பின்னர் லாரிகளில் எம்.சாண்ட் உள்ளதா என கண்டறிய ஜேசிபி இயந்திரத்தின் மூலம் லாரியில் உள்ள ஜல்லி கற்களை தோண்டி பார்த்தனர்.அதில் எம்.சாண்ட் மணல் இல்லாதாதையடுத்து லாரிகளை கேரளாவிற்கு அனுப்பி வைத்தனர்.