திருநெல்வேலி: திருநெல்வேலி சரகத்திற்கு உட்பட்ட நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுடன் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர்/படைத்தலைவர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் தலைமையில் சட்டம் & ஒழுங்கு குறித்து ஆலோசனை கூட்டம் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தென்மண்டல காவல்துறை தலைவர், நெல்லை மாநகர காவல் ஆணையர், நெல்லை சரக காவல்துறை துணை தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.