தென்காசி : டிசம்பர் 24 தேசிய காவலர் தினத்தை முன்னிட்டு நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மதிப்பிற்குரிய திரு.அ.சார்லஸ் அவர்களின் அறிவுறுத்தல்படி, தென்காசி மாவட்ட குடியுரிமை நிருபர்கள் சார்பாக ஏழை எளிய மக்கள் 100 நபர்களுக்கு காலை மற்றும் மதிய உணவு கொடுக்கப்பட்டது.
இதனை தென்காசி மாவட்ட குடியுரிமை நிருபர்கள் திரு.ராஜா தலைமையில், திரு.பீட்டர், திரு.ரமேஷ் உணவுகளை ஆலங்குளம் மற்றும் காளாத்திமடத்தில் வழங்கினார்கள். அதேநாளில் இரவு பாவூர்சத்திரம் பேரூந்து நிலையத்தில் இருந்த ஏழை எளியவர்களுக்கு இரவு உணவினை திரு.இமான் ஜேக்கப் தலைமையில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வை தென்காசி மாவட்ட போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்களின் அமைப்பு செயலாளர் முனைவர் ஞா.ஜோசப் அருண்குமார் ஒருங்கிணைத்தார்.