கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் காவலர் குடியிருப்பு வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு பர்கூர் டி. எஸ். பி மனோகரன் தலைமை வகித்தார். இந்த சமத்துவ பொங்கல் விழாவில் பாரம்பரிய உடையான வேட்டி சேலை அணிந்துக்கொண்டு புது பானையில் பொங்கல் வைத்தனர். பின்னர் கயிறு இழுக்கும் போட்டி பானை உடைத்தல் இசை நாற்காலி உள்ளிட்டவை நடைபெற்றது. இது வெற்றி பெற்று காவலர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை பரிசுகள் வழங்கினார். பர்கூர் காவல்துறையினர் உட்பட்ட காவலர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்