திண்டுக்கல் : திண்டுக்கல்லை அடுத்த வன்னியபாறைப்பட்டி அருகே நேற்று இரவு பெரியசாமி (எ) கோழி என்பவரை வெட்டி படுகொலை செய்த தொடர்பாக வடமதுரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து வேடசந்தூர் டி.எஸ்.பி. துர்காதேவி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வன்னியபாறைப்பட்டி பகுதியைச் சேர்ந்த செந்தில், ரமேஷ், ராஜேஷ், திண்டுக்கல் பொன்னகரத்தை சேர்ந்த சிவபாண்டி ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர் மேலும் முன்விரோதம் காரணமாக வெட்டி படுகொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா