கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த புலியூர் ஏரிக்கரை பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் நிலையில் இது குறித்து பொதுமக்கள் புகார் அளித்த நிலையில் புகாரியின் பேரில் பர்கூர் டி.எஸ்.பி மனோகரன் சம்பவ இடங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் போலீசாரிடம் இப்பகுதியில் வாகனங்களை மெதுவாக செல்ல பேரிகார்டு அமைக்கவும் மேலும் இப்பகுதியில் உள்ள வளைவுகளில் வேகத்தடை அமைக்க ஏற்பாடுகள் செய்யவும் மேலும் வேகத்தடை அமைக்கும் இடங்களில் மின் விளக்குகள் பொருத்தவும் பொதுமக்களிடமும் வாகன ஓட்டிகளிடம் ஏரிக்கரை பகுதியில் மெதுவாக செல்ல அறிவுரை வழங்கினார். இதில் காவல் உதவி ஆய்வாளர்கள் சிவசந்தர், கார்த்திகா மற்றும் பொதுமக்கள் இருந்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்