திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா, சித்தநத்தம் வருவாய் துறைக்கு உட்பட்ட குண்டலாம்பட்டி கிராமம் அருகே மலை அடிவாரத்தில், ஜேசிபி எந்திரம் மூலம் கனரக வாகனத்தில் கனிம வளங்கள் சட்ட விதிமுறைகளுக்கு புறம்பான முறையில் கொள்ளையடிக்கப்பட்டு வருவதாகவும், இதனை வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் செயல்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.மேலும், போக்குவரத்து விதிமுறைகளை மீறியும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் கனரக வாகனங்கள் இயக்கப்படுவதால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அச்சத்துடனையே பயணம் செய்து வருகின்றனர்.எனவே, உடனடியாக கனிம வளங்களை கொள்ளையடிக்கும் மாபியா கும்பலை கைது செய்வதோடு, கனிம வளங்கள் கொள்ளை அடிப்பதை அரசு தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றன.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி