மதுரை: மதுரை மாவட்டம் சக்குடியில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஜல்லிக்கட்டு விழாவை, தமிழக வணிக வரித்துறை அமைச்சர் பி மூர்த்தி தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டு ஏராளமான காளைகள் சீறிப்பாய்ந்தன. காளைகளை, மாடுபிடிவீரர்கள், அடக்கி பரிசுகளை பெற்றனர். காளைகள் சீறிப்பாய்ந்ததில் , பலர் காயம் அடைந்தனர். காயமடைந்த வீரர்களுக்கு, மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். ஜல்லிக்கட்டு விழாவானது கிராமத்தின் சார்பாக, வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக, ஜல்லிக்கட்டு ஒட்டி, உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர் மூர்த்தி உட்பட கிராமப் பிரமுகர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, கிராம விழா கமிட்டினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து இருந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி