திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் புகையிலைப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை கோட்டாட்சியர் கமலக்கண்ணன் தொடங்கி வைத்தார். கிழக்கு தாசில்தார் முத்துராமன் மண்டல துணை வட்டாட்சியர் தங்கமணி ஆகியோர் உடன் இருந்தனர். கால்நடைகள் மண்டல இணை இயக்குனர் ராம்நாத், உதவி இயக்குனர் அப்துல் காதர் தலைமையிலான மருத்துவ குழுவினர் கால்நடைகளை சோதனை செய்தனர்.வட்டார மருத்துவ அலுவலர் அசோக்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் வீரர்களை பரிசோதனை செய்து காளைகளை அடக்க அனுமதித்தனர். மாவட்ட துணை கண்காணிப்பாளர்கள். உதயகுமார்,முருகன், நத்தம் காவல் நிலைய ஆய்வாளர். முனியசாமி, சாணார்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர்.சிவராஜ் உள்பட 242 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் நாட்டான்மை சூசை மாணிக்கம் உள்பட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா