மதுரை: மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள், இந்த ஆண்டும் எவ்வித அசம்பாவிதமும் இன்றி பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை சீரான முறையில் நடத்துவதற்காக சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களின் சேவையை பாராட்டும் விதமாக, அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டப்பட்டது.
போட்டிகளின் போது பொதுமக்களின் பாதுகாப்பு, பார்வையாளர்கள் ஒழுங்கு, வீரர்கள் மற்றும் மாடுகளின் நலன் ஆகியவற்றை உறுதி செய்ய காவல் துறையினர் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைவரின் பாராட்டையும் பெற்றன. இந்த நிகழ்வு, காவல் துறையின் அர்ப்பணிப்பு, பொறுப்புணர்வு மற்றும் திறமையான பணியை வெளிப்படுத்துவதாக அமைந்தது.
















