மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் இந்து நாடார் உறவின்முறை பரிபாலன சங்கத்தின் காமராஜர் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள பத்ரகாளி அம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு, பிரசாத் சர்மா தலைமையில் சிவாச்சாரியார்கள் இரண்டு நாள் யாக பூஜை நடத்தினர். இதைத் தொடர்ந்து, இன்று காலை தொடர்ந்து யாக பூஜை நடைபெற்றது.
பின்னர், சிவாச்சாரியார்கள் நிர்வாகிகள் புனித நீர் குடங்களை மேளதாளத்துடன் எடுத்து கோவிலை வலம் வந்தனர். பின்னர், கோபுர கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்று பூஜைகள் நடந்தன. அனைவருக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பத்திரகாளியம்மன் மற்றும் பரிகார தெய்வங்களுக்கு பால் தயிர் உட்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, மகா அபிஷேகம் நடந்து சிறப்பு அர்ச்சனைகள் பூஜைகள் நடந்தன. அனைவருக்கும் அன்னதான வழங்கப்பட்டது. தலைவர் தங்கபாண்டியன் நிர்வாகிகள் ராஜகுரு, காமராஜ் ,ஜெயராஜ், கார்த்திகேயன், பாண்டியராஜன் கண்ணன் உட்பட நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர். இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி