திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே நடகோட்டையில் ராபின் சோலார் கம்பெனி உள்ளது. இங்கு முத்துக்காமன் பட்டியைச் சேர்ந்த செல்லக்கண்ணு என்பவரது மகன் சுரேஷ் வயது(42). என்பவர் இந்த கம்பெனியில் 2 வருடங்களாக செக்யூரிடி பிரிவில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இன்று பிற்பகல் காவலாளி சுரேஷ் கம்பெனியில் உள்ள செக்யூரிட்டி அறையில் மர்மமான முறையில் இறந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியுற்ற மற்ற காவலாளிகள் விருவீடு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த காவலாளி சுரேஷ்சின் உறவினர்கள் இவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து கம்பெனி முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து விருவீடு காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளி சுரேஷ்க்கு குணவதி (வயது 36). என்ற மனைவியும், விவேகா (வயது 14). என்ற மகளும், ஹரிஹாசன் (வயது 12). என்ற மகனும் உள்ளனர். காவலாளி சுரேஷ் இறந்தது குறித்து மர்மம் நீடிப்பதால் உறவினர்கள் தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா