கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் இ.கா.ப. அவர்கள், வெளி மாநில மதுபான கடத்தலை தடுக்கும் பொருட்டு மாவட்ட எல்லையில் அமைந்துள்ள ஆல்பேட்டை மற்றும் கும்தாமேடு சோதனை சாவடிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சோதனை சாவடிகளில் காவலர்கள் உரிய முறையில் சோதனை மேற்கொள்கிறார்களா, போதிய மின்வெளிச்ச வசதிகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் சரியாக செயல்படுகிறதா என்பதையும் அவர் ஆய்வு செய்தார். மேலும், சோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், சட்டவிரோத மதுபான கடத்தலை முழுமையாக தடுக்கும் வகையில் காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். இந்த ஆய்வின் போது துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. தமிழ்இனியன் மற்றும் காவல் ஆய்வாளர் திரு. சந்துரு ஆகியோர் உடன் இருந்தனர்.
















