திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் மற்றும் பாளையங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வி.எம் சத்திரம் மற்றும் KTC நகர் காவல் சோதனை சாவடிகளில் (19.03.2026) அன்று, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சேகர் தேஷ்முக் சஞ்சய் இ.கா.ப., திடீர் ஆய்வு மேற்கொண்டு பறக்கும் படையினர் மற்றும் காவலர்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் பற்றிய அறிவுரை வழங்கினார். மேலும் பொதுமக்கள் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களான தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவைகளை பயணத்தின் போது கொண்டு செல்ல நேரிட்டால் அதற்கான உரிய ஆவணங்களை உடன் வைத்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார். காவல் துணை ஆணையர், V.வினோத் சாந்தாராம் (கிழக்கு) உடன் இருந்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















