திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரல் சென்ற புறநகர் ரயிலில் அத்திப்பட்டு ரயில் நிலையத்தில் ஏறிய உறவினரை கத்தியால் கொலை செய்து விட்டு தப்ப முயன்ற சகோதரரை சக பயணிகள் பிடித்து ரயில்வே காவல்துறை ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த முரளி(44). இவரது தந்தையின் தம்பி மகனான ரவீந்திரன்(42). என்பவருடன் அவ்வப்போது குடும்ப சொத்து சம்பந்தமாக பிரச்சனை ஏற்பட்டது. இது சம்பந்தமாக இருவருக்கும் அடிக்கடி வாய் சண்டை ஏற்பட்டு வந்த நிலையில் இன்று நண்பகல் முரளி என்பவர் அத்திப்பட்டு இருந்து சென்னை நோக்கி சென்ற மின்சார ரயிலில் பயணம் செய்தார். அப்பொழுது அதே ரயிலில் பின் தொடர்ந்து வந்த அவரது சகோதரனா ரவீந்திரன் மறைத்து வைத்த கத்தி எடுத்து ஓடும் மின்சார ரயில் குத்தி உள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த முரளி அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனைக் கண்ட சக பயணிகள் ரவீந்திரனை பிடித்து ரயில்வே காவல்துறையிடம் ஒப்படைத்தனர் தொடர்ந்து உடலை கைப்பற்றிய கொருக்குப்பேட்டை ரயில்வே காவல்துறையினர் உடற்கூறு ஆய்விற்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ரவீந்திரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓடும் ரயிலில் நடந்த கொலை சம்பவம் ரயில் பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு