திருநெல்வேலி: திருநெல்வேலி நடுவக்குறிச்சி, உடையன்குளத்தை சேர்ந்த மந்திரமூர்த்திக்கும்,(45). தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாட்டை சேர்ந்த பூல்பாண்டி(67). என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக பூல்பாண்டி மற்றும் அவருடைய மருமகன் வல்லநாட்டை சேர்ந்த பாலா ஆறுமுகம் (45) ஆகிய இருவரும் (22.11.2024) அன்று மந்திரமூர்த்தியை அவருடைய வீட்டிற்கு முன்பு வைத்து அவதூறாக பேசி மிரட்டல் விடுத்ததால் மந்திரமூர்த்தி தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் உதவி ஆய்வாளர், தங்கப்பராஜா வழக்கு பதிவு செய்து பூல்பாண்டி மற்றும் பாலா ஆறுமுகம் ஆகிய இருவரையும் (23.11.2024) அன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்