திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் சைபர் மோசடி வழக்கில் இழந்த பணத்தை மீட்டு கொடுக்குமாறு சைபர் குற்றப்பிரிவு இணையதளமான www.cybercrime.gov.in மற்றும் 1930 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு புகார் அளித்ததை தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர்,இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, சைபர் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.M.பழனி அவர்களின் மேற்பாற்வையில், சைபர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.R.கவிதா அவர்களின் தலைமையிலான சைபர் குற்றப்பிரிவு போலீசார் உரிய விசாரணை செய்து துரிதமாக செயல்பட்டு அவர் இழந்த பணத்தை வங்கியின் உதவியுடன் மீட்டனர். இதனை தொடர்ந்து (25.08.2025) சைபர் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.M.பழனி அவர்கள், இணைய வழியில் பணத்தை இழந்த நபர்களை நேரில் அழைத்து மீட்கப்பட்ட பணம் மொத்தம் ரூ.12,00,000/- ஐ உரியவர்களிடம் ஒப்படைத்தார்.