கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில், கடலூர் சைபர் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதலின்படி பண்ருட்டியில் நடைபெற்ற தமிழ்நாடு முந்திரி பதப்படுத்துபவர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க மாநாட்டில் கடலூர் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. கவிதா தலைமை விருந்தினராகப் பங்கேற்று மாணவர்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்தும், ஆன்லைன் மோசடிகள், சமூக ஊடகங்களில் பாதுகாப்பாக இருப்பதன் முக்கியத்துவம் குறித்தும், தனிப்பட்ட தகவல்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்தும், இணையத்தை பொறுப்புடன் பயன்படுத்துவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, சைபர் குற்ற உதவி எண் 1930 மற்றும் அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.cybercrime.gov.in பற்றிய தகவல்களும் வழங்கப்பட்டன.
















