தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த் உத்தரவின் பேரில் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடையே போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள், மற்றும் சைபர் கிரைம் குறித்து காவல் துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக (09.12.2025) அன்று கடையநல்லூரில், மாவட்ட சைபர் கிரைம் மற்றும் சோசியல் மனித உரிமை கழகம் இணைந்து நடத்திய பள்ளி மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியினை சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், ஜூலியஸ் சீசர், துணை காவல் கண்காணிப்பாளர் அறிவழகன், ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இப்பேரணியானது கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கி, கடையநல்லூர் சந்தை வழியாக சென்று கடையநல்லூர் காவல் நிலையத்தில் நிறைவு பெற்றது. முன்னதாக பள்ளி மாணவர்களுக்கு சைபர் கிரைம் காவல் ஆய்வாளர், வசந்தி சைபர் குற்றங்கள், ஆன்லைன் மோசடி, காவல் உதவி எண்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















