திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் துறையின் சைபர் கிரைம் தடுப்பு பிரிவு சார்பாக 8 இணைய வழி குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு குறும்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. OTP SCAM, இணையதள பணமுதலீடு மோசடி, வேலை வாய்ப்பு, வாகன சான்றிதழ் சரிபார்ப்பு செயலி ( PARIVAHAN APP) மோசடி என பல்வேறு சைபர் குற்றங்களை சம்பந்தமாக பொதுமக்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் குறும்படங்களை தயாரித்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் (14.11.2025) அன்று திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதி மணி, இ.கா.ப., காவல் துணை ஆணையர், விஜயகுமார் (தலைமையிடம்) ஆகியோர் வெளியிட்டனர். சைபர் கிரைம் குற்றங்களில் பாதிக்கப்பட்டால் உடனடியாக 1930 என்ற எண் மற்றும் www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலம் புகார் அளிக்கலாம் என மாநகர காவல் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















