திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன். இ.கா.ப., அறிவுறுத்தலின் பேரில் சைபர் குற்றங்களிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொது மக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக திருநெல்வேலி மாவட்டம், சீதபற்பநல்லூர் அருகே உள்ள EINSTEIN கல்லூரியிலும், அம்பாசமுத்திரம், அகஸ்தியர்பட்டி கேம்பிரிட்ஜ் பள்ளியிலும், வி.கே.புரம் அமலி பள்ளியிலும் மாணவ, மாணவிகளுக்கு திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், முருகன்., தலைமையில் பெண்கள் சமூக வலைதளங்களில் தங்களது புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதால் ஏற்படும் விளைவுகள், வங்கிக் கணக்குகளின் இரகசிய எண்களை அறிமுகம் இல்லாத நபர்களிடம் பகிர்வது, மற்றும் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் குறுஞ்செய்தி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு பதில் அளிக்காமல் கவனமாக இருந்தால் பெருகி வரும் சைபர் குற்றங்களிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.
பண மோசடி சம்பந்தமான குற்றங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய இலவச உதவி எண் 1930 மற்றும் (http://cybercrime.gov.in) இணையதள முகவரியில் புகார் அளிக்கலாம் எனக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்