மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அரசு ஊழியர்கள் சங்க அலுவலக கட்டிடத்தில், லயன்ஸ் கிளப், உசிலம்பட்டி சிஎஸ்சி கணினி மையம் மற்றும் சைபர் கிரைம் போலீஸ் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சிஎஸ்சி கணினி மைய கிளை மேலாளர் விமலா கிறிஸ்டி முன்னிலை வகித்தார். இதில் மதுரை மாவட்ட சைபர் கிரைம் சார்பு ஆய்வாளர் விஜயபாஸ்கரன் பங்கேற்று, சமூக வலைதளங்களில் ஏற்படும் தீமைகள், கணினி மூலம் ஏற்படும் பிரச்சனைகள், சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டுவிட்டர் போன்றவைகளைகளில் வரும் விளம்பரங்களை பார்த்து அதில் பணம் செலுத்த வேண்டாம், மேலும், அதில் வரும் விளம்பரங்களை தவிர்ப்பது, தடை செய்யப்பட்ட செல்போன் செயலிகளை தவிர்ப்பது,போன் கால் மூலம் செல்போன் எண்ணிற்கு ஓடிபி வழங்குவதை தவிர்ப்பது, பகுதி நேர மற்றும் முழு நேர வேலைவாய்ப்பபு விளம்பரங்களில், பணம் செலுத்த வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். அதனைத் தொடர்ந்து, சிஎஸ்சி கணினி மையத்தில் கணினி பயின்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி