திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடி கண்காணிப்பில் இயங்கி வரும் சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், P.P. முருகன் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர், V.ரமா தலைமையில் கைபேசிகள் தொலைந்து போனதாக பெறப்பட்ட புகார்களில் கைப்பற்றப்பட்ட 100 கைபேசிகளை (24.07.2025) அன்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
இதன் மதிப்பு Rs. 18,18,873/- ஆகும். மேலும் காணாமல் போன (அ) தவறவிட்ட கைப்பேசிகள் தொடர்பாக புகார் அளிக்க CEIR- Central Equipment Identity Register https://www.ceir.gov.in/ இந்திய தொலைத் தொடர்பு துறையால் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் புகார்தாரர் தனது தொலைந்து போன (அ) தவறவிட்ட கைபேசி தொடர்பான விவரங்களை பதிவு செய்து புகார் அளிக்கலாம் (அ) காவல் நிலையத்தில் பதிவு செய்து புகார் அளிக்கலாம். காணாமல் போன கைபேசியை பயன்படுத்தி பல குற்றங்கள் செய்ய வாய்ப்பு உள்ளதால் தொலைந்து (அ) காணாமல் போனால் அது குறித்து உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகாரளித்தால், அவற்றை மீட்க முடியும் என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்