திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே தொலைந்த மொபைலில் இருந்து Google Pay செயலியின் மூலம் பணம் திருடபட்டுள்ளதையடுத்து சைபர் கிரைம் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்து திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் அறிவுறுத்தலின்படி, விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டு, திருவண்ணாமலை மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நடுவர்-II திரு.E.தெய்வீகன் அவர்களின் உத்தரவின்படி, வங்கியின் மூலம் இழந்த பணத்தைப் பெற்று (06.02.2024)-ந் தேதி சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.M.பழனி அவர்களால் புகார்தாரர் இழந்த பணத்தில் ரூ.50,000/- திரும்ப வழங்கப்பட்டது. உடன் DCB ஆய்வாளர் திருமதி.கவிதா அவர்கள் இருந்தார்.