திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின் படி திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய தொழில்நுட்ப சார்பு ஆய்வாளர். லாய்டு சிங் மற்றும் காவலர்கள் சார்பில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் மற்றும் கடைகளில் சைபர் குற்றங்கள் குறித்தும், அவற்றை கையாளும் முறைகள் குறித்தும் மேலும் சைபர் கிரைம் குற்றங்களுக்கு 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளும் படியும், இணையதளம் வழியாக புகார் செய்ய www.cybercrime.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தும் படியும் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா