தேனி: சைபர் கிரைம் தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் குற்றங்களை தடுக்க தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவின் உமேஷ்,இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தேனி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.R.அரங்கநாயகி,
உதவி காவல் ஆய்வாளர் திரு.S.தாமரைக்கண்ணன் மற்றும் காவல் நிலைய காவல்துறையினர் சைபர் கிரைம் தொடர்பான குற்றங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்
தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.வீ.முரளிதரன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கியும், பண மோசடி சம்பந்தமான குற்றங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய இலவச உதவி எண் 155260, மற்றும் மோசடி புகார் களுக்கு புகார் செய்ய வேண்டிய இணையதள முகவரியை (http://cybercrime.gov.in) வழங்கியும் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும் பொதுமக்கள் தங்களது சமூக வலைதளங்களை கையாளும் பொழுது மிகவும் கவனமுடனும், பாதுகாப்புடனும் கையாள வேண்டும் என தேனி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய காவல்துறையினர் கேட்டுக் கொள்கின்றனர்.