புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரைகளின் படி புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை காவல் சரக காட்டுபுதூர் மற்றும் கல்லாக்கோட்டை பகுதியில் 06.10.2021 இன்று
சைபர் கிரைம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. கவிதா அவர்கள் மற்றும் சைபர் கிரைம் காவல்துறையினர் இணைந்து பொது மக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும், அதற்கு உட்படாமல் விழிப்புடன் இருக்கும் வழிமுறைகள் குறித்தும், சைபர் குற்றங்களுக்கும் மற்றும் பண இழப்பு ஏற்படின் உடனடியாக “155260” உதவி எண்ணை அணுகவும்.மேலும் புகார் அளிக்க www.cybercrime.gov.in NCRP portal தெரிவிக்கவும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கினார்கள்.
என்றும் மக்கள் நலனில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை