திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற அருள்மிகு ஶ்ரீகோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப்,IPS அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர்.குணசுந்தரி தொழில்நுட்ப சார்பு ஆய்வாளர்.லாய்டு சிங் மற்றும் காவலர்கள் சார்பில் திண்டுக்கல் மாவட்டம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் சைபர் குற்றங்கள் குறித்தும், அவற்றை கையாளும் முறைகள் குறித்தும் மேலும் சைபர் கிரைம் குற்றங்களுக்கு 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளும் படியும், இணையதளம் வழியாக புகார் செய்ய www.cybercrime.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தும் படியும் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் பக்தர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா