திண்டுக்கல் : தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறை கூடுதல் இயக்குனர் திரு.சஞ்சய் குமார், இ.கா.ப., அவர்களின் உத்தரவு படியும், தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு காவல் கண்காணிப்பாளர் திருமதி.தேவராணி, இ.கா.ப., அவர்கள் மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் (05.07.2023) திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.மீனா அவர்கள் மற்றும் தொழில்நுட்ப சார்பு ஆய்வாளர் திரு.லாய்டு சிங் அவர்கள் திண்டுக்கல் M.V.M அரசு மகளிர் கலைக் கல்லூரியில் சைபர் குற்றங்கள் குறித்தும், அவற்றை கையாளும் முறைகள் குறித்தும் மேலும் சைபர் கிரைம் குற்றங்களுக்கு 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளும் படியும், இணையதளம் வழியாக புகார் செய்ய www.cybercrime.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தும் படியும் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா