திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., உத்தரவின் பேரில், காவல்கிணறு ஜாய் பல்கலைக்கழகத்தில் மாணவ மாணவிகளுக்கான சைபர் கிரைம் விழிப்புணர்வு நடத்தப்பட்டது. ஓவிய போட்டி, டிஜிட்டல் போஸ்டர் கிரியேஷன், மற்றும் quaiz ஆகிய போட்டிகளை நடத்தி அதில் வென்ற மாணவ மாணவிகளுக்கு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலச்சந்திரன்,(தலைமையிடம்) பரிசுகளை வழங்கினார்.
இதன் தொடர்ச்சியாக காவல்கிணறு காவல் சோதனைச் சாவடியில் இருந்து சைபர் கிரைம் விழிப்புணர்வு பேரணியை வள்ளியூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர், யோகேஷ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சுமார் 500 மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்ற இப் பேரணி காவல்கிணறு செக்போஸ்டில் தொடங்கி வடக்கன்குளத்தில் முடிவுற்றது. இந் நிகழ்ச்சியை திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளர், ரமா மற்றும் காவல் உதவி ஆய்வாளர், ராஜரத்தினம் மற்றும் தொழில்நுட்ப காவல் உதவி ஆய்வாளர், மோகன் மற்றும் சைபர் கிரைம் காவல் நிலைய காவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்