திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் பொது மக்கள் தங்கள் கைப்பேசி வாயிலாக டெலிகிராம், மற்றும் வாட்ஸ் அப் மூலம் கிடைக்கப்பெறும் குறுஞ்செய்திகளை வைத்து, வீட்டிலிருந்தே அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று வரும் செய்திகளை நம்பி பண மோசடி கும்பல்களிடம் சிக்கி பணத்தை இழந்து வருகின்றனர். இது பற்றிய புகார்கள் ஏராளமாக திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல் துறைக்கு வந்து கொண்டிருக்கிறது.
குறிப்பாக Google Review, Hotel review, Recharge, Online booking, Online review மற்றும் பல பெரிய நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி, ஆன்லைன் மூலம் போலியாக Website- யை உருவாக்கி அதில் சிறிய Task-யை கொடுத்து அந்த Website ல் பணம் வந்திருப்பதாக காண்பிப்பார்கள். பின்பு அதில் உள்ள WITHDRAW OPTION மூலம் உங்களது வங்கி கணக்கில் வரவு வைத்து நம்பிக்கை ஏற்படுத்தி, தொடர்ச்சியாக அதிக அளவு பணத்தை முதலீடு செய்ய வைத்து லாபம் வந்திருப்பதாக ஏமாற்றி பின்பு லட்ச கணக்கிலான தொகையை முதலீடு செய்ய வைத்து மோசடி செய்வார்கள்.
பொதுமக்கள் இது போன்று ஆன்லைன் மோசடியில் சிக்கி பணம் இழப்பு ஏற்பட்டால் உடனடியாக 1930 என்ற இலவச எண்ணிற்கு அழைத்து புகார் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது www.cybercrime.gov.in என்ற வளைதளம் மூலமாகவும் புகாரினை பதிவு செய்து கொள்ள திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்