இன்றைய கால கட்டங்களில் சைபர் குற்றவாளிகள் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பதிவு செய்யும் நபர்களை follow செய்து அவர்களிடம் நண்பர்களாக பின் தொடர்வார்கள். பின் பெண்களைப்போல பேசி Artificial Intelligence உதவியுடன் பெண்களைப்போல முகத்தினை மாற்றிக்கொண்டு video call பேசி அதன் மூலம் மிரட்டி பணம் பறிக்கும் குற்றங்களில் ஈடுபடுவார்கள்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
சமூக வலைதளங்களில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து வரும் நட்பு அழைப்புகளை ஏற்க கூடாது.
Privacy settings சமூக வலைத்தள கணக்குகளுக்கு செய்து கொள்ள வேண்டும்.
அறிமுகமில்லாத எண்களில் இருந்து வரும் video call களை ஏற்கக்கூடாது.
ஒரு வேளை நீங்கள் பாதிக்கப்பட்டால் https://cybercrime.gov.in/ என்ற
இணையதளத்தில் புகாரளிக்கவும். மேலும் 155260 என்ற இலவச எண்ணிலும் புகார் அளிக்கலாம்.