திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி 18.11.2021 இன்று சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. சங்கு அவர்களின் தலைமையின் கீழ் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் ( பொறுப்பு ) திருமதி. மீராள் பானு அவர்கள் மற்றும் சைபர் கிரைம் காவல் துறையினர்கள் ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் வைத்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும், பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் அதில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வது பற்றியும், சமூக வலைதளங்கள் மூலம் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும்,
சமூக வலைதளங்களில் தங்களுடைய தனிப்பட்ட புகைப்படங்களை பகிர வேண்டாம் என்றும், சமூக வலைத்தளத்தின் முலம் அறிமுகம் இல்லாத நபர்கள் தொடர்பு கொண்டால் அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது பற்றியும், சமூக வலைதளம் மூலம் வேலைவாய்ப்பு மோசடி மற்றும் மின் வணிக தளங்களின் மூலம் ஏற்படும் நிதி மோசடி பற்றியும்,
சைபர் கிரைம் காவல்துறையினரின் இலவச எண் 155260 பயன்படுத்துவது பற்றியும் கல்லூரி மாணவிகளுக்கு துண்டுபிரசுரங்கள் வழங்கியும் சைபர் கிரைம் காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.