திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் பகுதியில் குடியிருந்து வரும் (39). வயதான பெண்மனி ஒருவர் (10.01.2024)-ஆம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்துக் கொண்டிருந்த போது பங்கு சந்தை பற்றிய பதிவு வந்துள்ளது. அதை கிளிக் செய்து முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்ற தகவலின் பேரில் ரூபாய் 15,50,041/- அனுப்பி உள்ளார். அதற்கு ரூபாய் 4,12,662/- மட்டும் திரும்ப கிடைத்துள்ளது. மேலும் மீதி பணம் 11,37,379/-ஐ தராமல் மோசடி செய்து விட்டதாக அந்தப் பெண்மணிக்கு தெரிய வந்ததால் (16-10-2024)-அன்று திருநெல்வேலி மாநகர சைபர் கிரைம் பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல் ஆய்வாளர், சண்முகவடிவு மற்றும் போலீசார் குற்றவாளியை தேடி வருகிறார்கள்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்