திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த சைலேந்திரபாபு. இவர் சமூக வலைத்தளத்தில், ஆன்லைனில் பணத்தை இரட்டிப்பாக பெறலாம் என்ற ஒரு விளம்பரத்தை பார்த்து அதில் இருந்த இணையதள இணைப்பில் சிறிது சிறிதாக மொத்தம் ரூ.50 ஆயிரம் செலுத்திய நிலையில், அவருடைய கணக்கில் ரூ.1 லட்சத்துக்கும் மேல் இருப்பு உள்ளதாக காண்பித்தது. எனவே அதில் இருந்து பணத்தை எடுக்க முயன்றார். ஆனால் பணத்தை எடுக்க முடிய வில்லை. சின்னாளபட்டி சேர்ந்த லட்சுமி என்பவரிடம் ஆன்லைன் கடன் தருவதாக கூறி ரூ.4,20,000 ஏமாற்றி மோசடி, இவைகள் குறித்து சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கிறார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா