திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.மீனா அவர்கள் தொழில்நுட்ப சார்பு ஆய்வாளர் திரு.லாய்டு சிங் அவர்கள் மற்றும் காவலர்கள் சார்பில் செம்பட்டி அருகே உள்ள மானிட சேவை மையம் என்ற தொண்டு நிறுவனத்தில் பயிலும் மாணவர்களிடம் கணினி குற்றங்கள் குறித்தும், அவற்றிலிருந்து நம்மை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்தும், இணையதளங்களை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக பயன்படுத்தும் படியும், மேலும் இணைய வழி குற்றங்கள் குறித்து புகார் செய்ய 1930 என்ற எண்னை அழைக்கும் படியும், இணையதளம் வாயிலாக புகார் செய்ய www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தும் படியும் அறிவுரை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.