திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கீழவைராவிகுளத்தை சேர்ந்த முத்து (38) என்பவர் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். அவரது பிள்ளைகள் பள்ளிக்கு செல்வதற்காக மூன்று சைக்கிள்களை வாங்கி (13.09.2024) அன்று தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்துள்ளார். பின்பு மறுநாள் காலை வந்து பார்த்த போது நிறுத்தி இருந்த இடத்தில் மூன்று சைக்கிளையும் காணவில்லை. இது குறித்து முத்து கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் உதவி ஆய்வாளர், திருமலைகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் வைராவிகுளத்தை சேர்ந்த பீட்டர் ஞானராஜ் (38) என்பவர் சைக்கிளை திருடியது தெரிய வந்ததை அடுத்து உதவி ஆய்வாளர், பீட்டர் ஞானராஜை (23.09.2024) இன்று கைது செய்து அவரிடமிருந்து மூன்று சைக்கிள்களையும் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்